• Sep 20 2024

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

Chithra / Jan 5th 2023, 11:16 am
image

Advertisement

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க எனும் தொணிப் பொருளின் கீழ் திருகோணமலை - மகேசர் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள இவ் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை 06 நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து, "ஒன்றிணைவோம் ஒருமித்த குரலினை உரக்கச்சொல்வோம்"  எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணமெங்கும் போராட்டம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நாவற்குழிச் சந்தியில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மக்கள் தமது போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். 


வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க எனும் தொணிப் பொருளின் கீழ் திருகோணமலை - மகேசர் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள இவ் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை 06 நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, "ஒன்றிணைவோம் ஒருமித்த குரலினை உரக்கச்சொல்வோம்"  எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணமெங்கும் போராட்டம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நாவற்குழிச் சந்தியில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மக்கள் தமது போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement