உலகம் முழுவதும் சுமார் நான்கு மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் கேம்பிரிட்ஜ் தரம் 10 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் மாணவன் ரியாதுல் இஸ்லாம் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய இலங்கை மாணவர்களில் ரியாதுல் இஸ்லாம் என்ற மாணவன் முதலாம் இடத்தையும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் இலங்கையில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அம்பபாலி சிகுராஜாபதி தெரிவித்தார்.
இலங்கையின் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளுக்கான வதிவிட அதிகார சபையின் பாஞ்சாலி குலதுங்க, ரியாதுல் இஸ்லாம் எனும் மாணவனின் இந்த சிறப்பான சாதனை ஒரு சிறப்பு மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்திருந்தார்.
மாணவன் ரியாதுல் இஸ்லாம் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்று வருகின்றார்.
இம்மாணவன் படிப்பிலும், சாராத செயல்பாடுகளிலும், விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார்.
ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையின் நிறுவனரும் ஜப்பானின் தலைமை சங்கநாயகமான பனகல உபதிஸ்ஸ தேரர், அண்மையில் இந்த மாணவனைச் சந்தித்து, இவரின் கல்விப் படிநிலையில் மேலும் வெற்றிபெற வாழ்த்தினார்.
உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் பரீட்சையில் சாதித்த இலங்கை மாணவன். உலகம் முழுவதும் சுமார் நான்கு மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் கேம்பிரிட்ஜ் தரம் 10 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் மாணவன் ரியாதுல் இஸ்லாம் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்.பரீட்சைக்குத் தோற்றிய இலங்கை மாணவர்களில் ரியாதுல் இஸ்லாம் என்ற மாணவன் முதலாம் இடத்தையும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் இலங்கையில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அம்பபாலி சிகுராஜாபதி தெரிவித்தார்.இலங்கையின் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளுக்கான வதிவிட அதிகார சபையின் பாஞ்சாலி குலதுங்க, ரியாதுல் இஸ்லாம் எனும் மாணவனின் இந்த சிறப்பான சாதனை ஒரு சிறப்பு மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்திருந்தார்.மாணவன் ரியாதுல் இஸ்லாம் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்று வருகின்றார். இம்மாணவன் படிப்பிலும், சாராத செயல்பாடுகளிலும், விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார்.ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையின் நிறுவனரும் ஜப்பானின் தலைமை சங்கநாயகமான பனகல உபதிஸ்ஸ தேரர், அண்மையில் இந்த மாணவனைச் சந்தித்து, இவரின் கல்விப் படிநிலையில் மேலும் வெற்றிபெற வாழ்த்தினார்.