• Oct 27 2024

வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை !!! புதிய சட்டம் அனுமதி!! samugammedia

Tamil nila / Oct 15th 2023, 6:49 am
image

Advertisement

பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபட்டால் விசாக்களை ரத்துச் செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக்  உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து , யூத விரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஹமாஸைப் புகழ்ந்தாலோ அவர்கள் நாடுகடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் , தடைசெய்யப்பட்ட அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் கருத்து வெளிக்கிளம்பும் நிலையில், தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி, மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசாக்களை ரத்துச் செய்ய பிரித்தானிய சட்டம் அனுமதிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான், பிரான்சில் யூத விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார்.  என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே 3 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள பிரைட்டனில், கடந்த வார இறுதியில் ஹமாஸுக்கு ஆதரவான உரையை நிகழ்த்தியதாகக் கூறப்படும் 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை புதிய சட்டம் அனுமதி samugammedia பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபட்டால் விசாக்களை ரத்துச் செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக்  உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.இதனை அடுத்து , யூத விரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஹமாஸைப் புகழ்ந்தாலோ அவர்கள் நாடுகடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.மேலும் , தடைசெய்யப்பட்ட அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் கருத்து வெளிக்கிளம்பும் நிலையில், தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி, மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசாக்களை ரத்துச் செய்ய பிரித்தானிய சட்டம் அனுமதிக்கிறது என அவர் கூறியுள்ளார்.இதேவேளை, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான், பிரான்சில் யூத விரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளார்.  என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே 3 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள பிரைட்டனில், கடந்த வார இறுதியில் ஹமாஸுக்கு ஆதரவான உரையை நிகழ்த்தியதாகக் கூறப்படும் 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement