• May 19 2024

வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன்..! கல்முனை சாஹிறா கல்லூரிக்கு கிடைத்த பெருமை..! samugammedia

Chithra / Nov 21st 2023, 10:35 am
image

Advertisement

 

 

கிழக்கின்  பிரபல்யமிக்க பாடசாலைகளுள் ஒன்றான  கல்முனை சாஹிறாக்  கல்லூரியின் தரம் 11 மாணவன் எம்.ரி.எம்.அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Association Coventry) கிளையினால் நடாத்தப்பட்ட சர்வதேச நிகழ்நிலை மூலமாக கட்டுரை போட்டியில் அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு என்னும் துணைப் பொருளில் ஆங்கில மொழி மூலம் கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றிய இம்மணவன் சர்வதேச ரீதியில் 15-17 வயது பிரிவில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினை பெற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இம்மாணவனின் சாதனைக்காக சர்வதேச தரத்திலான சான்றிதழும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பண பரிசினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Association Coventry) கிளையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இம்மாணவனின் இச்சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அவரது பெற்றோருக்கும், இக்கல்லூரியின் பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர், இணைபாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எச்.எம்.அபூபக்கர் மற்றும் தரம் பதினொன்றின் பகுதி தலைவர் ரீ.கே.எம்.ஸாக்கீர்,  ஏனைய வழிகளில் உதவி புரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன். கல்முனை சாஹிறா கல்லூரிக்கு கிடைத்த பெருமை. samugammedia   கிழக்கின்  பிரபல்யமிக்க பாடசாலைகளுள் ஒன்றான  கல்முனை சாஹிறாக்  கல்லூரியின் தரம் 11 மாணவன் எம்.ரி.எம்.அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Association Coventry) கிளையினால் நடாத்தப்பட்ட சர்வதேச நிகழ்நிலை மூலமாக கட்டுரை போட்டியில் அமைதியான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு என்னும் துணைப் பொருளில் ஆங்கில மொழி மூலம் கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றிய இம்மணவன் சர்வதேச ரீதியில் 15-17 வயது பிரிவில் பங்கு பற்றி மூன்றாம் இடத்தினை பெற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.இம்மாணவனின் சாதனைக்காக சர்வதேச தரத்திலான சான்றிதழும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பண பரிசினையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Association Coventry) கிளையினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.இம்மாணவனின் இச்சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அவரது பெற்றோருக்கும், இக்கல்லூரியின் பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர், இணைபாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எச்.எம்.அபூபக்கர் மற்றும் தரம் பதினொன்றின் பகுதி தலைவர் ரீ.கே.எம்.ஸாக்கீர்,  ஏனைய வழிகளில் உதவி புரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement