• Jun 19 2024

துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? காணொளி குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம்! samugammedia

Chithra / Nov 21st 2023, 10:38 am
image

Advertisement

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது.

அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று நவம்பர் 27 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, 

காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

மேலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால்,  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றாரா காணொளி குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம் samugammedia  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது.அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று நவம்பர் 27 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.மேலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால்,  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement