• Jun 27 2024

ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா? சபையில் ரணிலிடம் கேள்வியெழுப்பிய கஜேந்திரன் எம்பி

Sharmi / Jun 18th 2024, 10:30 pm
image

Advertisement

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரா? என தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு ஜனாதிபதி ரணில் பதிலளிக்காமல் நழுவிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(18) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றியிருந்தார். 

ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். 

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எழுந்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார். 

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கருத்துரைத்து அமர்திருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகளை அவர் செய்து கொண்டுவருவதாக தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற நிலையில், இந்த நாட்டினை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்குச் செய்யப்பட வேண்டிய மிகப் பிரதானமான கடமையொன்று இருக்கின்றது என்பதனை ஜனாதிபதியின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். 

கடந்த 75 வருடங்களாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் உறவைச் சீர்குலைத்து துருவமயப்படுத்தியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியது.

இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் சமத்துவமாக இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கக்கூடிய ஓர் சமஸ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதன் மூலம் மட்டுமே அந்த முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும். 

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தனது காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த நாட்டின் தோல்விக்கு இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புத்தான் காரணம் என்பதனை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் சமஸ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திலும் பங்கெடுத்து உலக வல்லரசு தரத்திற்கு இந்த நாட்டைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறான ஒரு சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு அவர் தயாராக இருக்கின்றாரா என்ற கேள்வியை அவரிடம் கேட்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா சபையில் ரணிலிடம் கேள்வியெழுப்பிய கஜேந்திரன் எம்பி ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரா என தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு ஜனாதிபதி ரணில் பதிலளிக்காமல் நழுவிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(18) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றியிருந்தார். ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எழுந்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார். ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து கருத்துரைத்து அமர்திருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகளை அவர் செய்து கொண்டுவருவதாக தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற நிலையில், இந்த நாட்டினை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்குச் செய்யப்பட வேண்டிய மிகப் பிரதானமான கடமையொன்று இருக்கின்றது என்பதனை ஜனாதிபதியின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். கடந்த 75 வருடங்களாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் உறவைச் சீர்குலைத்து துருவமயப்படுத்தியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியது.இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் சமத்துவமாக இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கக்கூடிய ஓர் சமஸ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதன் மூலம் மட்டுமே அந்த முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும். ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தனது காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டின் தோல்விக்கு இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புத்தான் காரணம் என்பதனை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் சமஸ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திலும் பங்கெடுத்து உலக வல்லரசு தரத்திற்கு இந்த நாட்டைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான ஒரு சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு அவர் தயாராக இருக்கின்றாரா என்ற கேள்வியை அவரிடம் கேட்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement