• Jun 26 2024

திடீரென மாயமான 4 வயது சிறுவன் - தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் மீட்பு

Chithra / Jun 18th 2024, 2:01 pm
image

Advertisement


காணாமல் போன நான்கு வயது சிறுவன் தேயிலை பற்றைக்குள் இருந்து இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது நான்கு வயது மகனை காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில்  தந்தை ஒருவர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தை சேர்ந்த 4 வயதுடைய   அபிலாஷன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

இவர்கள் திருமண நிகழ்வு ஒன்றுக்கு டிக்கோயா பகுதியில் உள்ள டங்கல் மேற்பிரிவுக்கு சென்ற வேளையே சிறுவன் காணாமல்போயுள்ளார்.

திருமண நிகழ்வுக்கு சென்று தமது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தவேளை நேற்று மாலை சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டு இருந்ததாகவும்,

மாலை 6.30 மணியளவில் சிறுவன் அங்கிருந்து காணாமல் போனதாகவும் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுற்றுவட்ட பகுதியில் சிறுவனை தேடியும் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோர்வூட் பொலிஸ் மற்றும் தோட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் சிறுவனை தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

இதையடுத்து சிறுவன் பயத்தில் தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நோர்வூட் பொலிஸார் சிறவனை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

திடீரென மாயமான 4 வயது சிறுவன் - தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் மீட்பு காணாமல் போன நான்கு வயது சிறுவன் தேயிலை பற்றைக்குள் இருந்து இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தனது நான்கு வயது மகனை காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில்  தந்தை ஒருவர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தை சேர்ந்த 4 வயதுடைய   அபிலாஷன் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.இவர்கள் திருமண நிகழ்வு ஒன்றுக்கு டிக்கோயா பகுதியில் உள்ள டங்கல் மேற்பிரிவுக்கு சென்ற வேளையே சிறுவன் காணாமல்போயுள்ளார்.திருமண நிகழ்வுக்கு சென்று தமது உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தவேளை நேற்று மாலை சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டு இருந்ததாகவும்,மாலை 6.30 மணியளவில் சிறுவன் அங்கிருந்து காணாமல் போனதாகவும் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சுற்றுவட்ட பகுதியில் சிறுவனை தேடியும் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நோர்வூட் பொலிஸ் மற்றும் தோட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் சிறுவனை தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.இதையடுத்து சிறுவன் பயத்தில் தேயிலை பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளார்.சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நோர்வூட் பொலிஸார் சிறவனை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement