கண்டி ஹட்டன் பிரதான A7 வீதியில் குயில்வத்தை பிரதேசத்தில் அதிகவேகமாக பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றது.
கண்டியில் இருந்து ஹட்டன் வரைக்கும் இந்த கார் பயணித்த நிலையில் ஹட்டன் குயில்வத்தை பகுதியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட போது, காரில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. எனினும், அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு. வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான கார். கண்டி ஹட்டன் பிரதான A7 வீதியில் குயில்வத்தை பிரதேசத்தில் அதிகவேகமாக பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.இச் சம்பவம் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றது.கண்டியில் இருந்து ஹட்டன் வரைக்கும் இந்த கார் பயணித்த நிலையில் ஹட்டன் குயில்வத்தை பகுதியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.அனர்த்தம் ஏற்பட்ட போது, காரில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. எனினும், அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.