தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடத்தில் மோட்டார் சைக்கிளில் குழுவாக இறங்கி சரமாரியாக நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் அக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைத்த நிலையில் பருத்திதுறை ஆதார
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்திதுறை கொட்டடி பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய்? உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் துரத்தித் துரத்தி வாள்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுகு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் தே.ம.சக்தியின் பா.உ க. இளங்குமரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் தாக்குதல் தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலொன்று நடாத்தப்பட்டுள்ளது.தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடத்தில் மோட்டார் சைக்கிளில் குழுவாக இறங்கி சரமாரியாக நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் அக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைத்த நிலையில் பருத்திதுறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்திதுறை கொட்டடி பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது- 28) விஜயராசா செந்தூரன் (வயது- 29) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கால் பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறை, கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பெடுத்த நபர் ஒருவர் நீ தானே தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், கரையோரப் பகுதிகளுகளில் தேசிய மக்கள் சக்திக்காக வேலை செய்கிறாய் உங்களது இடத்திற்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகிறது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.அச்சுறுத்தல் விடுத்து சுமார் பத்து நிமிடத்தில் கொட்டடி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்கள் துரத்தித் துரத்தி வாள்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இத் தாக்குதலில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரின் சகோதரன் உட்பட இருவர் வாள்வெட்டுகு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் தே.ம.சக்தியின் பா.உ க. இளங்குமரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராந்து பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் தாக்குதல் தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.