• May 19 2024

பல வகை மூலிகை டீயினால் கோடிகளில் புரளும் தமிழன்...!samugammedia

Sharmi / May 16th 2023, 11:09 am
image

Advertisement

இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த  ஜோசப் ராஜேஷ் என்ற இளைஞரே பிளாக் பெக்கோ என்ற டீக்கடையின் மூலம் இந்த கோடிகளிற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான ஜோசப் ராஜேஷ், தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்ச கொட்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வேளைச்சேரியில் 100 சதுர அடி தேநீர் கடையை ரூ.50000 முதலீட்டில் ஆரம்பித்த அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லி அன் ஃபுட்&பீவரேஜஸ் பிரைவட் லிமிடேட் என்ற பெயரில் 70 சங்கிலி தொடர் கடைகளை கட்டமைத்துள்ளார்.

பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்காக ரூ.6-7 லட்சம் ரூபாய் ஜோசப் வசூலிப்பதுடன் அவற்றுக்கான பயிற்சிகள் மற்றும் கடைகளை நடத்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றார்.

அத்தோடு, அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.

இது தொடர்பாக ஜோசப் ராஜேஷ், 2020 - 2021 இல் வருமானம் 7 கோடி ரூபாயாக இருந்தது.தற்போது நிதி ஆண்டில் ரூ.10 கோடியை தாண்டுவோம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


பல வகை மூலிகை டீயினால் கோடிகளில் புரளும் தமிழன்.samugammedia இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த  ஜோசப் ராஜேஷ் என்ற இளைஞரே பிளாக் பெக்கோ என்ற டீக்கடையின் மூலம் இந்த கோடிகளிற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான ஜோசப் ராஜேஷ், தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்ச கொட்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வேளைச்சேரியில் 100 சதுர அடி தேநீர் கடையை ரூ.50000 முதலீட்டில் ஆரம்பித்த அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லி அன் ஃபுட்&பீவரேஜஸ் பிரைவட் லிமிடேட் என்ற பெயரில் 70 சங்கிலி தொடர் கடைகளை கட்டமைத்துள்ளார்.பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்காக ரூ.6-7 லட்சம் ரூபாய் ஜோசப் வசூலிப்பதுடன் அவற்றுக்கான பயிற்சிகள் மற்றும் கடைகளை நடத்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றார். அத்தோடு, அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார். இது தொடர்பாக ஜோசப் ராஜேஷ், 2020 - 2021 இல் வருமானம் 7 கோடி ரூபாயாக இருந்தது.தற்போது நிதி ஆண்டில் ரூ.10 கோடியை தாண்டுவோம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement