• May 02 2024

நீதிபதிக்கே அச்சுறுத்தல்...!தமிழ் மக்களின் நிலை தொடர்பில் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும்...! சிவனேசன் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 30th 2023, 1:27 pm
image

Advertisement

நீதிபதியே அச்சுறுத்தலால் இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னாள்  வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும் இலங்கையின் நீதித்துறை தொடர்பிலும் இன்று (30.09.2023) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது நீண்டகாலமாக பேரினவாத சக்திகளால் பல வழிகளிலும் நீதித்துறைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது அறிந்த விடயம்.

பேரினவாத சக்திகள் தங்களுக்கு சார்பான தீர்ப்பு வரவேண்டும் என்பதிலே பல வழிகளிலும் நீதித்துறையினை அழுத்தத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது வெளிப்படையான விடயம். இன்று அது உச்ச கட்டமாக இருக்கின்றது. 

இன்று அவர் பதவி விலகி இருக்கின்றார். என்பதை இலங்கையில் இருக்கின்ற ஜனநாயக ரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.  இது இனரீதியாக பார்க்கக்கூடிய விடயமல்ல இலங்கையின் நீதித்துறை இன்று மிகவும் ஒரு கேள்விக்குறியான விடயத்தில் வந்திருக்கின்றது. ஒரு நீதிபதி தன்னுடைய தீர்ப்பினை நியாயமான முறையில் தெரிவிப்பதில் கூட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்றால் இதனை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இன்று ஜனாதிபதி உலக ரீதியாக வலம் வந்து ஜனநாயத்தினை பேசிவரும் காலகட்டத்தில் இலங்கையில் தன்னுடைய ஆட்சிக்கு கீழ் இருக்கின்ற நீதிபதி தனக்கு நீதி வழங்கியதற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்காக பதவியில் இருந்து விலகியது மாத்திரமில்லாமல் இங்கு இருக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் இது நியாயம் தானா இந்த நாட்டில் நீதி இருக்கின்றதா?

ஆகவே மிக நீண்டகாலமாக தமிழ் மக்கள் இந்த அளவிற்கு நீதிதுறையால் மாத்திரமல்ல நாட்டிலுள்ள அமுலாக்க பிரிவினால் அனைத்தினாலும் தமிழ்மக்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகித்து கொண்டு வருவது நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது அதற்காக போராட்டங்கள் நடந்தது இதனால்தான் என்பதை இன்றாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும்எனவும் தெரிவித்தார்.

நீதிபதிக்கே அச்சுறுத்தல்.தமிழ் மக்களின் நிலை தொடர்பில் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும். சிவனேசன் வேண்டுகோள்.samugammedia நீதிபதியே அச்சுறுத்தலால் இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னாள்  வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும் இலங்கையின் நீதித்துறை தொடர்பிலும் இன்று (30.09.2023) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது நீண்டகாலமாக பேரினவாத சக்திகளால் பல வழிகளிலும் நீதித்துறைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது அறிந்த விடயம்.பேரினவாத சக்திகள் தங்களுக்கு சார்பான தீர்ப்பு வரவேண்டும் என்பதிலே பல வழிகளிலும் நீதித்துறையினை அழுத்தத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது வெளிப்படையான விடயம். இன்று அது உச்ச கட்டமாக இருக்கின்றது.  இன்று அவர் பதவி விலகி இருக்கின்றார். என்பதை இலங்கையில் இருக்கின்ற ஜனநாயக ரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.  இது இனரீதியாக பார்க்கக்கூடிய விடயமல்ல இலங்கையின் நீதித்துறை இன்று மிகவும் ஒரு கேள்விக்குறியான விடயத்தில் வந்திருக்கின்றது. ஒரு நீதிபதி தன்னுடைய தீர்ப்பினை நியாயமான முறையில் தெரிவிப்பதில் கூட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்றால் இதனை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.இன்று ஜனாதிபதி உலக ரீதியாக வலம் வந்து ஜனநாயத்தினை பேசிவரும் காலகட்டத்தில் இலங்கையில் தன்னுடைய ஆட்சிக்கு கீழ் இருக்கின்ற நீதிபதி தனக்கு நீதி வழங்கியதற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்காக பதவியில் இருந்து விலகியது மாத்திரமில்லாமல் இங்கு இருக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் இது நியாயம் தானா இந்த நாட்டில் நீதி இருக்கின்றதாஆகவே மிக நீண்டகாலமாக தமிழ் மக்கள் இந்த அளவிற்கு நீதிதுறையால் மாத்திரமல்ல நாட்டிலுள்ள அமுலாக்க பிரிவினால் அனைத்தினாலும் தமிழ்மக்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகித்து கொண்டு வருவது நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது அதற்காக போராட்டங்கள் நடந்தது இதனால்தான் என்பதை இன்றாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும்எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement