• May 19 2024

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அச்சுறுத்தலா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க வவு.மாவட்ட செயலாளர் வீட்டின் மீது விசமிகள் கொடூர தாக்குதல்!

Sharmi / Jan 26th 2023, 11:21 am
image

Advertisement

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிதாவின் வீட்டிற்குள் இன்று அதிகாலை 3.45 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டிற்கு கழிவு ஓயில் ஊற்றியும் வீட்டின்மேல் போத்தல்களால் தாக்கியும் அச்சுறுத்தியுள்ளனர். 

அதேவேளை ஜெனிதாவிற்கு தொலைபேசி மூலமாகவும் தொடர்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிகதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்களாலும் பொதுஅமைப்புக்களாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

இந்த நிலையிலேயே மேற்குறித்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.











போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அச்சுறுத்தலா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க வவு.மாவட்ட செயலாளர் வீட்டின் மீது விசமிகள் கொடூர தாக்குதல் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிதாவின் வீட்டிற்குள் இன்று அதிகாலை 3.45 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அவரின் வீட்டிற்கு கழிவு ஓயில் ஊற்றியும் வீட்டின்மேல் போத்தல்களால் தாக்கியும் அச்சுறுத்தியுள்ளனர். அதேவேளை ஜெனிதாவிற்கு தொலைபேசி மூலமாகவும் தொடர்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று ஜனாதிகதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்களாலும் பொதுஅமைப்புக்களாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட வேலன் சுவாமிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்றன. இந்த நிலையிலேயே மேற்குறித்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.குறித்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement