• Apr 20 2025

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம்; பெண் படுகாயம்..!

Sharmi / Feb 21st 2025, 3:40 pm
image

வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று(21) மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் ஏற முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம்; பெண் படுகாயம். வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று(21) மதியம் இடம்பெற்றுள்ளது.இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் ஏற முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement