• May 09 2024

லட்சம் செலவில் திருமணம்- இறுதி நிமிடத்தில் புகைப்படக்காரர் எடுத்த முடிவால் பரபரப்பு!

Sharmi / Feb 1st 2023, 3:25 pm
image

Advertisement

இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது மகளின் திருமணத்தில் புகைப்படம் எடுக்காது விலகிய பிரபல புகைப்பட கலைஞரிடம் இருந்து $27,000 பணத்தை திரும்பத் தருமாறு கோரியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி-யைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமித் படேல் தனது மகள் அனிஷா-வின்(28) திருமணத்திற்காக shutterbug Clane Gessel என்ற பிரபல புகைப்பட கலைஞரை பணியமர்த்தியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு புகைப்பட கலைஞர் shutterbug Clane Gessel தனது ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், டாக்டர் அமித் படேல் தனது மகள் அனிஷா-க்கும் துருக்கியின் அர்ஜுன் மேத்தா இருவருக்கும் இடையிலான திருமணத்திற்கு புதிய புகைப்பட கலைஞரை கண்டுபிடிக்க சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளார்.

ஒரு வருட திட்டமிடல் மற்றும் வோக் (Vogue) ஆகியவற்றுடன் நடத்தப்பட இருந்த நான்கு நாள் திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு 13 சிறப்பு தனி உடைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் 250 விருந்தினர்கள் கலந்து கொள்ள இருந்துள்ளனர்.

திருமணத்திற்கான ஒப்பந்தம் "நல்ல ஆறு இலக்க எண்களை" கொண்டு இருந்தது என்றும், ஆனால் இறுதி கட்டத்தில் புகைப்பட கலைஞரால் அது கிட்டத்தட்ட பேரழிவாக மாறியது  என நியூயார்க் போஸ்ட்டுடன் பேசிய படேல் தெரிவித்துள்ளார்.

இதனால் சம்பந்தப்பட்ட அந்த புகைப்பட கலைஞரிடம் $27,000 பணத்தை டாக்டர் அமித் படேல் திரும்பக் கோரிக்கை விடுத்துள்ளார். .

மேலும், இது மிகவும்  கவலைக்குரியது. “உங்கள் மகளின் திருமணத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படக்காரர் வரவில்லை என்று  நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்,” என்று நியூயார்க் போஸ்ட்டில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


லட்சம் செலவில் திருமணம்- இறுதி நிமிடத்தில் புகைப்படக்காரர் எடுத்த முடிவால் பரபரப்பு இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது மகளின் திருமணத்தில் புகைப்படம் எடுக்காது விலகிய பிரபல புகைப்பட கலைஞரிடம் இருந்து $27,000 பணத்தை திரும்பத் தருமாறு கோரியுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சி-யைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமித் படேல் தனது மகள் அனிஷா-வின்(28) திருமணத்திற்காக shutterbug Clane Gessel என்ற பிரபல புகைப்பட கலைஞரை பணியமர்த்தியுள்ளார்.ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு புகைப்பட கலைஞர் shutterbug Clane Gessel தனது ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், டாக்டர் அமித் படேல் தனது மகள் அனிஷா-க்கும் துருக்கியின் அர்ஜுன் மேத்தா இருவருக்கும் இடையிலான திருமணத்திற்கு புதிய புகைப்பட கலைஞரை கண்டுபிடிக்க சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளார். ஒரு வருட திட்டமிடல் மற்றும் வோக் (Vogue) ஆகியவற்றுடன் நடத்தப்பட இருந்த நான்கு நாள் திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு 13 சிறப்பு தனி உடைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் 250 விருந்தினர்கள் கலந்து கொள்ள இருந்துள்ளனர். திருமணத்திற்கான ஒப்பந்தம் "நல்ல ஆறு இலக்க எண்களை" கொண்டு இருந்தது என்றும், ஆனால் இறுதி கட்டத்தில் புகைப்பட கலைஞரால் அது கிட்டத்தட்ட பேரழிவாக மாறியது  என நியூயார்க் போஸ்ட்டுடன் பேசிய படேல் தெரிவித்துள்ளார்.இதனால் சம்பந்தப்பட்ட அந்த புகைப்பட கலைஞரிடம் $27,000 பணத்தை டாக்டர் அமித் படேல் திரும்பக் கோரிக்கை விடுத்துள்ளார். .மேலும், இது மிகவும்  கவலைக்குரியது. “உங்கள் மகளின் திருமணத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படக்காரர் வரவில்லை என்று  நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்,” என்று நியூயார்க் போஸ்ட்டில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement