• Jan 19 2025

மூதூரில் களைகட்டிய மாட்டுப் பொங்கல்..!

Sharmi / Jan 15th 2025, 1:08 pm
image

தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மூதூர் பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடை பட்டிகளில் பொங்கல் பொங்கி இன்று(15) மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.

இதன்போது பட்டிகளிலுள்ள மாடுகளுக்கு திருநீறு அணிவித்ததுடன், கழுத்துகளில் பூமாலை இட்டு பலகாரம் செய்து தொங்கவிட்டிருந்ததையும் காணமுடிந்தது.

அத்தோடு பட்டிகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு பட்டிப் பொங்கலை மூதூர் கால்நடை வளர்ப்பாளர்கள்  கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




மூதூரில் களைகட்டிய மாட்டுப் பொங்கல். தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்தவகையில் மூதூர் பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடை பட்டிகளில் பொங்கல் பொங்கி இன்று(15) மாட்டுப் பொங்கலை கொண்டாடினர்.இதன்போது பட்டிகளிலுள்ள மாடுகளுக்கு திருநீறு அணிவித்ததுடன், கழுத்துகளில் பூமாலை இட்டு பலகாரம் செய்து தொங்கவிட்டிருந்ததையும் காணமுடிந்தது.அத்தோடு பட்டிகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு பட்டிப் பொங்கலை மூதூர் கால்நடை வளர்ப்பாளர்கள்  கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement