• May 19 2024

காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் - ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள் samugammedia

Chithra / Aug 8th 2023, 5:47 pm
image

Advertisement

புத்தளம் எலுவாங்குளம் 16ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 54 வயதுடைய ஒருவரை யானைத் தாக்கி படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காட்டு யானைகளைத் தடுத்து தமது உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்குமாறு கோரி புத்தளம் எலுவாங்குளம் 16ம் கட்டைப் பகுதியில் வீதியோரத்தில் இன்று அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது அந்த வழியால் சென்ற வண்ணாத்திவில்லு பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் ஒருவரை மக்கள் இடை நிறுத்தப்பட்டு கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இதன்போது வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தில் நாளை காலை இடம்பெறவுள்ள விவசாய சங்க கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன்னெடுப்பதாக குறித்த அதிகாரி தெரிவித்தார். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குறித்த யானைகள் வில்பத்துக் காட்டிலிருந்து கலா ஓயா பாலத்தினைக் கடந்து கிராமங்களுக்குள் உற்புகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்தும்ம் காட்டுயானைகளை இரகசியமாக கொண்டுவந்து அப்பகுதியினுல் விடுவிப்பதாகவும் இதன்போது எதிர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் - ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள் samugammedia புத்தளம் எலுவாங்குளம் 16ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 54 வயதுடைய ஒருவரை யானைத் தாக்கி படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து காட்டு யானைகளைத் தடுத்து தமது உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்குமாறு கோரி புத்தளம் எலுவாங்குளம் 16ம் கட்டைப் பகுதியில் வீதியோரத்தில் இன்று அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன்போது அந்த வழியால் சென்ற வண்ணாத்திவில்லு பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் ஒருவரை மக்கள் இடை நிறுத்தப்பட்டு கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.இதன்போது வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தில் நாளை காலை இடம்பெறவுள்ள விவசாய சங்க கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன்னெடுப்பதாக குறித்த அதிகாரி தெரிவித்தார். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.குறித்த யானைகள் வில்பத்துக் காட்டிலிருந்து கலா ஓயா பாலத்தினைக் கடந்து கிராமங்களுக்குள் உற்புகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்தும்ம் காட்டுயானைகளை இரகசியமாக கொண்டுவந்து அப்பகுதியினுல் விடுவிப்பதாகவும் இதன்போது எதிர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement