• May 19 2024

திருமலை பாடசாலைக்கு திடீரென சென்ற காட்டு யானை!

Sharmi / Dec 7th 2022, 11:36 am
image

Advertisement

திருமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட நிலாவெளி_பெரியகுளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் அப் பகுதியில் உள்ள பாடசாலை வளாகத்தின் சுற்று மதில்களும் பல தடவை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக் காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் நிம்மதியாக தூங்க முடியாத நிலையும் தங்களது பிள்ளைகளை அச்சத்துடனேயே பாடசாலைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்துக்குள் புகும் காட்டு யானையானது மேட்டு நிலப் பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். 

இக் காட்டு யானை தொடர் தொல்லை தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

திருமலை பாடசாலைக்கு திடீரென சென்ற காட்டு யானை திருமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட நிலாவெளி_பெரியகுளம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் அப் பகுதியில் உள்ள பாடசாலை வளாகத்தின் சுற்று மதில்களும் பல தடவை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக் காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் நிம்மதியாக தூங்க முடியாத நிலையும் தங்களது பிள்ளைகளை அச்சத்துடனேயே பாடசாலைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமத்துக்குள் புகும் காட்டு யானையானது மேட்டு நிலப் பயிர்களையும் துவம்சம் செய்து விட்டு செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். இக் காட்டு யானை தொடர் தொல்லை தாக்குதலில் இருந்து பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement