• Feb 27 2025

பெலியத்தயில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி

Tharmini / Feb 26th 2025, 11:49 am
image

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விசேட அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம, களுவா மோதரவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (26)  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதைக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ரயிலில் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

களுவாமோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

பெலியத்தயில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விசேட அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.அளுத்கம, களுவா மோதரவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (26)  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ரயில் பாதைக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்த போது ரயிலில் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.களுவாமோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement