• May 17 2024

ஒரே பிரசவத்தில் ஆறு (6) குழந்தைகளை பெற்ற பெண்ணுக்கு தியாகி அறக்கொடை நிதியம் நிதியுதவி...!samugammedia

Anaath / Oct 26th 2023, 10:00 am
image

Advertisement

ஒரே பிரசவத்தில்  ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ளதுள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு  அவர்களின் குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஆறு  குழந்தைகளை கடந்த வாரம் கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் திருமதி மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா பெற்றெடுத்துள்லாமை குறிப்பிடத்தக்கது.

துரசிஷ்டவசமாக ஒரு குழந்தை தனது நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இறந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளார்.

இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும்  ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ்  தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க  முதல் கட்டமாக ஒரு இலச்சம் ரூபாய் நிதியுதவித்தொகை இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்கள் மூலம் குறித்த தம்பதியினரிடம் கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையின் வைத்து அதன் பணிப்பாளர் வைத்தியர் ஏ.தந்த நாராயன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறான மனிதாபிமான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும்  தியாகி அறக்கொடை நிதியம் வழங்குவதற்கு  தயாராக இருப்பதாக அதன் தலைவர்  வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

ஒரே பிரசவத்தில் ஆறு (6) குழந்தைகளை பெற்ற பெண்ணுக்கு தியாகி அறக்கொடை நிதியம் நிதியுதவி.samugammedia ஒரே பிரசவத்தில்  ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ளதுள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு  அவர்களின் குடும்ப சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு ஆறு  குழந்தைகளை கடந்த வாரம் கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் திருமதி மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா பெற்றெடுத்துள்லாமை குறிப்பிடத்தக்கது.துரசிஷ்டவசமாக ஒரு குழந்தை தனது நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இறந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளார்.இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும்  ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ்  தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க  முதல் கட்டமாக ஒரு இலச்சம் ரூபாய் நிதியுதவித்தொகை இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்கள் மூலம் குறித்த தம்பதியினரிடம் கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையின் வைத்து அதன் பணிப்பாளர் வைத்தியர் ஏ.தந்த நாராயன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறான மனிதாபிமான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும்  தியாகி அறக்கொடை நிதியம் வழங்குவதற்கு  தயாராக இருப்பதாக அதன் தலைவர்  வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement