• May 09 2024

நாளை முடங்கவுள்ள பாடசாலைகள் - போராட்டத்தில் குதிக்கவுள்ள அதிபர், ஆசிரியர்கள்..! samugammedia

Chithra / Oct 26th 2023, 9:54 am
image

Advertisement

 

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சு முன்பாக முன்னெடுத்த போராட்டத்தின் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள்.

பொலிஸாரின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்போம் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பொலிஸாரின் வெறுக்கத்தக்க செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை பகல் 01.30 மணிக்கு பிறகு சகல பாடசாலைகளின் முன்பாகவும் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்க முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாளை முடங்கவுள்ள பாடசாலைகள் - போராட்டத்தில் குதிக்கவுள்ள அதிபர், ஆசிரியர்கள். samugammedia  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சு முன்பாக முன்னெடுத்த போராட்டத்தின் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள்.பொலிஸாரின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்போம் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க முன்னணியின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.பொலிஸாரின் வெறுக்கத்தக்க செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை பகல் 01.30 மணிக்கு பிறகு சகல பாடசாலைகளின் முன்பாகவும் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.கொழும்பில் உள்ள ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்க முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement