• Apr 03 2025

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் மரணம்- காத்தான்குடியில் சம்பவம்..!

Sharmi / Aug 14th 2024, 12:55 pm
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக தெரிவித்தார் 

காத்தான்குடி பிரதான வீதி, மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள், முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் முன்னால் வந்த  மோட்டார் சைக்கிளின் சைக்கிள் ஓட்டியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

குறித்த விபத்து சம்பவங்களால் மோட்டார் சைக்கிள்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் மரணம்- காத்தான்குடியில் சம்பவம். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக தெரிவித்தார் காத்தான்குடி பிரதான வீதி, மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள், முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேநேரம் முன்னால் வந்த  மோட்டார் சைக்கிளின் சைக்கிள் ஓட்டியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த விபத்து சம்பவங்களால் மோட்டார் சைக்கிள்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now