• Sep 15 2025

அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் - பலர் மீது வழக்குத் தாக்கல்

Chithra / Sep 14th 2025, 12:23 pm
image

 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல், அரிசி இருப்புக்களை மறைத்தல் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசியை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், 900க்கும் மேற்பட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் ஒரு தனிப்பட்ட வர்த்தகருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அவருக்கு இரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம், அல்லது 5 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் முதல 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் - பலர் மீது வழக்குத் தாக்கல்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல், அரிசி இருப்புக்களை மறைத்தல் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசியை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில், 900க்கும் மேற்பட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் ஒரு தனிப்பட்ட வர்த்தகருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அவருக்கு இரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம், அல்லது 5 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதேநேரம், ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் முதல 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement