• Nov 23 2024

கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து..!

Chithra / Sep 26th 2024, 12:43 pm
image

 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் கலைக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய குழுக்கள் நியமிக்கப்படும் வரை அதன் உறுப்பினர்களாக மாத்திரம் செயற்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர், சபை முதல்வர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து.  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் கலைக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய குழுக்கள் நியமிக்கப்படும் வரை அதன் உறுப்பினர்களாக மாத்திரம் செயற்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபால டீ சில்வா செயற்பட்டிருந்தார்.இந்த நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர், சபை முதல்வர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement