திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் தனியார் பஸ், இராணுவத்தின் பார ஊர்தி ஒன்று நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று காலை இடம் பெற்றதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பஸ் ஒன்று, திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலீசார் தெரிவிக்கின்றனர்
திருகோணமலையில் இன்று கோர விபத்து; ஒருவர் பலி 27 பேர் படுகாயம் திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் தனியார் பஸ், இராணுவத்தின் பார ஊர்தி ஒன்று நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலீஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று காலை இடம் பெற்றதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பஸ் ஒன்று, திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பஸ் வண்டியில் பயணித்த 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவரே உயிரிழந்துள்ளார்காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலீசார் தெரிவிக்கின்றனர்