• Sep 20 2024

மாட்டுடன் மோதி விபத்து - யாழ்பாணத்திற்கான கடுகதி புகையிரத சேவை பாதிப்பு! samugammedia

Chithra / Jul 20th 2023, 7:44 am
image

Advertisement

மாட்டுடன் மோதி இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானது.

தண்டவாள பகுதியில் காணப்பட்ட மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக கடுகதி புகையிரதத்தின் இயந்திரப்பகுதி பழுதடைந்ததை அடுத்து பயணத்தை தொடர முடியாது குறித்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.

இதன் போது மாடு உயிரிழந்த நிலையில் புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை சரிசெய்து மீள இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.

இவ்வாறு பல மணி நேரமாகியும் புகையிரத இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்படாததையடுத்து பயணத்தினை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் கொண்டுவரப்பட்டு குறித்த புகையிரதம் எடுத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாட்டுடன் மோதி விபத்து - யாழ்பாணத்திற்கான கடுகதி புகையிரத சேவை பாதிப்பு samugammedia மாட்டுடன் மோதி இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானது.தண்டவாள பகுதியில் காணப்பட்ட மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக கடுகதி புகையிரதத்தின் இயந்திரப்பகுதி பழுதடைந்ததை அடுத்து பயணத்தை தொடர முடியாது குறித்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.இதன் போது மாடு உயிரிழந்த நிலையில் புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனை சரிசெய்து மீள இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.இவ்வாறு பல மணி நேரமாகியும் புகையிரத இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்படாததையடுத்து பயணத்தினை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் கொண்டுவரப்பட்டு குறித்த புகையிரதம் எடுத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement