• May 17 2024

கவனமாக செயற்படுங்கள்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Dec 26th 2022, 8:28 am
image

Advertisement

இலங்கையில் தற்போது விடுமுறை காலம் என்பதனால் உல்லாச பயணங்களுக்குச் செல்பவர்கள் ஆறுகள், ஓடைகள் மற்றும் கடற்கரைகளில் குளிப்பவர்கள் கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் அருவிகளுக்கு அருகில் நீராடச்செல்லும் போது வானிலை அறிவிப்புகளை செவிமடுக்குமாறும், தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் நீராடச்செல்லும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கடற்கரைக்கு அருகில் நீராட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பொது இடங்களில் போதையில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாகனம் செலுத்தும் போது சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனவும், இவ்வாறு செயற்படுபவர்கள் 119 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

கவனமாக செயற்படுங்கள் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் தற்போது விடுமுறை காலம் என்பதனால் உல்லாச பயணங்களுக்குச் செல்பவர்கள் ஆறுகள், ஓடைகள் மற்றும் கடற்கரைகளில் குளிப்பவர்கள் கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் அருவிகளுக்கு அருகில் நீராடச்செல்லும் போது வானிலை அறிவிப்புகளை செவிமடுக்குமாறும், தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் நீராடச்செல்லும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் கடற்கரைக்கு அருகில் நீராட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பொது இடங்களில் போதையில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வாகனம் செலுத்தும் போது சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் எனவும், இவ்வாறு செயற்படுபவர்கள் 119 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement