• Nov 17 2024

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் யாட்டிற்கு எதிராக நடவடிக்கை..!

Sharmi / Aug 31st 2024, 3:16 pm
image

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் வியாபாரம் முன்னெடுக்கப்பட்ட மணல் யாட்டை  பொலிஸ் மற்றும் கனிய வள பிரிவினர் இணைந்து மூடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சட்டவிரோதமான முறையில்  மணல் யாட் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபடுவது தொடர்பில் கிளிநொச்சி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரான, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 27.08.2024 அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில், கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் யாட் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபடுவந்த  மணல் யாட் ஒன்றினை உடனடியாக மூடப்பட வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா விடுத்த உத்தரவுக்கு அமைவாக அப்பகுதியில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், கனியவள பிரிவினர் இணைந்து முரசுமோட்டை பகுதியில் இயங்கி வந்த குறித்த மணல் யாட்டினை உடனடியாக மூடியதுடன், அப்பகுதியில் இருந்து 63 க்யூப் மணலினையும் பறிமுதல் செய்தனர். 



கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் யாட்டிற்கு எதிராக நடவடிக்கை. கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் வியாபாரம் முன்னெடுக்கப்பட்ட மணல் யாட்டை  பொலிஸ் மற்றும் கனிய வள பிரிவினர் இணைந்து மூடியுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சட்டவிரோதமான முறையில்  மணல் யாட் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபடுவது தொடர்பில் கிளிநொச்சி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரான, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் கடந்த 27.08.2024 அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அந்த வகையில், கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் யாட் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபடுவந்த  மணல் யாட் ஒன்றினை உடனடியாக மூடப்பட வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா விடுத்த உத்தரவுக்கு அமைவாக அப்பகுதியில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், கனியவள பிரிவினர் இணைந்து முரசுமோட்டை பகுதியில் இயங்கி வந்த குறித்த மணல் யாட்டினை உடனடியாக மூடியதுடன், அப்பகுதியில் இருந்து 63 க்யூப் மணலினையும் பறிமுதல் செய்தனர். 

Advertisement

Advertisement

Advertisement