சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களில் காலதாமதம் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பில் தாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாகவும் மக்களை இவ்வாறு அலைய வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட காரியாலயத்திற்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மாத்தறை மாவட்ட அலுவலகத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அங்கிருந்த அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை. அமைச்சர் அதிரடி சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களில் காலதாமதம் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.இவ்விடயம் தொடர்பில் தாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாகவும் மக்களை இவ்வாறு அலைய வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட காரியாலயத்திற்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இங்கு மாத்தறை மாவட்ட அலுவலகத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அங்கிருந்த அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.