• May 19 2024

வடக்கு ஆளுநரின் கடிதங்கள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் கடிதம் SamugamMedia

Chithra / Feb 20th 2023, 8:48 pm
image

Advertisement

வடக்கு சுகாதாரத்துறையின் இடமாற்றங்கள் மற்றும் நியமனம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின்  உதவிச் செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு சுகாதார துறையில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வட மாகாண ஆளுநருக்கு குற்றச்சாட்டுகளை ஏற்கனவே வழங்கி வந்தனர்.

வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளுநர் செயலகம் வரை சென்றது.

வடக்கு சுகாதாரத் துறை தொடர்பில் ஆளுநர் மத்திய சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கைகள் தாமதமாயின.

தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

வட மாகாண ஆளுநரனால் மத்திய சுகாதார அமைச்சிக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திர குத்தாவுக்கு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் எழுத்து மூலமாக பணிப்புரை விடுத்துள்ளார்.


வடக்கு ஆளுநரின் கடிதங்கள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் கடிதம் SamugamMedia வடக்கு சுகாதாரத்துறையின் இடமாற்றங்கள் மற்றும் நியமனம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின்  உதவிச் செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.வடக்கு சுகாதார துறையில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வட மாகாண ஆளுநருக்கு குற்றச்சாட்டுகளை ஏற்கனவே வழங்கி வந்தனர்.வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளுநர் செயலகம் வரை சென்றது.வடக்கு சுகாதாரத் துறை தொடர்பில் ஆளுநர் மத்திய சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கைகள் தாமதமாயின.தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.வட மாகாண ஆளுநரனால் மத்திய சுகாதார அமைச்சிக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திர குத்தாவுக்கு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் எழுத்து மூலமாக பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement