• May 20 2024

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் எடுத்த அதிரடி முடிவு..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 9:26 am
image

Advertisement

யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்  விடுமுறை வழங்குதல் தொடர்பில் மீண்டும் யாழ் மாவட்டச் செயலரைச் சந்தித்துக் கலந்துரையாட தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று(5)  நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் தனியார் கல்வி.நிலைய உரிமையாளர்கள் கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தனர்.

இதில் 50க்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

தரம்  ஒன்று முதல் ஒன்பது வரையான வகுப்புகளுக்கு வெள்ளி மற்றும  ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடாத்தப்படக்கூடாது என  மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டது. 

இது இந்த மாதம் 1ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை இத் தீர்மானத்தின் படி வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக வகுப்புக்களை நிறுத்தும் தருணம் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல்  12 மணி்குப் பிறகு வகுப்புக்களை நடாத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட செயலரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அனைத்து தனியார் கல்வி.நிலைய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் எடுத்த அதிரடி முடிவு.samugammedia யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்  விடுமுறை வழங்குதல் தொடர்பில் மீண்டும் யாழ் மாவட்டச் செயலரைச் சந்தித்துக் கலந்துரையாட தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.நேற்று(5)  நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் தனியார் கல்வி.நிலைய உரிமையாளர்கள் கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தனர். இதில் 50க்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.தரம்  ஒன்று முதல் ஒன்பது வரையான வகுப்புகளுக்கு வெள்ளி மற்றும  ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடாத்தப்படக்கூடாது என  மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டது.  இது இந்த மாதம் 1ம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.இதேவேளை இத் தீர்மானத்தின் படி வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக வகுப்புக்களை நிறுத்தும் தருணம் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல்  12 மணி்குப் பிறகு வகுப்புக்களை நடாத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட செயலரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளனர்.இதேவேளை அண்மையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அனைத்து தனியார் கல்வி.நிலைய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement