• Sep 19 2024

தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு நடவடிக்கை! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 10:08 pm
image

Advertisement

எதிர்வரும் காலங்களில் தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

 தொடருந்து திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

 தொடருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் அவதானம்; செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எனினும், தொடருந்து திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டால் மாத்திரமே, இந்த யோசனை நடைமுறைக்கு வரும் என தொடருந்து திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்தார். 

 தற்போது தொடருந்து திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 தொடருந்து பருவச்சீட்டினை இரத்து செய்வதன் மூலம் தொடருந்து திணைக்களத்திற்கு இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தொடருந்து திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றும் யோசனையுடன், இந்தியாவின் முன்னணி வர்த்தகர்கள் தொடருந்து சேவையில் முதலிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு நடவடிக்கை samugammedia எதிர்வரும் காலங்களில் தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.  தொடருந்து திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  தொடருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் அவதானம்; செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், தொடருந்து திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டால் மாத்திரமே, இந்த யோசனை நடைமுறைக்கு வரும் என தொடருந்து திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.  தற்போது தொடருந்து திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் தொடருந்து பருவச்சீட்டை இரத்து செய்வது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தொடருந்து பருவச்சீட்டினை இரத்து செய்வதன் மூலம் தொடருந்து திணைக்களத்திற்கு இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடருந்து திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றும் யோசனையுடன், இந்தியாவின் முன்னணி வர்த்தகர்கள் தொடருந்து சேவையில் முதலிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement