• May 19 2024

தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை – இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு samugammedia

Chithra / Aug 31st 2023, 10:28 am
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல், கருத்துக் கணிப்பு மற்றும் முறைப்பாடுகளை பரிசீலித்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனங்கள் வர்த்தக சான்றிதழ்களைப் பெற வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது, மற்ற நாட்களில் மாலை 6 மணிக்கு முன் நடத்த வேண்டும்.

மேலும் ஒரு மணி நேர வகுப்பின் அதிகபட்ச கட்டணம் உயர்தர மாணவருக்கு 70 ரூபாயாகவும் மற்ற மாணவர்களுக்கு 50 ரூபாயாகவும் இருக்க வேண்டும்.


பெற்றோர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், நேர அட்டவணை, வருகை குறிக்கப்படல், ஆசிரியர்களின் பெயர் காட்ட வேண்டும் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

பயிற்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் பற்றிய தகவல்கள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

இதேநேரம் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் வகுப்புகள் அல்லது கருத்தரங்குகளை நடத்தக்கூடாது.


தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை – இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு samugammedia கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல், கருத்துக் கணிப்பு மற்றும் முறைப்பாடுகளை பரிசீலித்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.தனியார் கல்வி நிறுவனங்கள் வர்த்தக சான்றிதழ்களைப் பெற வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது, மற்ற நாட்களில் மாலை 6 மணிக்கு முன் நடத்த வேண்டும்.மேலும் ஒரு மணி நேர வகுப்பின் அதிகபட்ச கட்டணம் உயர்தர மாணவருக்கு 70 ரூபாயாகவும் மற்ற மாணவர்களுக்கு 50 ரூபாயாகவும் இருக்க வேண்டும்.பெற்றோர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், நேர அட்டவணை, வருகை குறிக்கப்படல், ஆசிரியர்களின் பெயர் காட்ட வேண்டும் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும்.பயிற்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் பற்றிய தகவல்கள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.இதேநேரம் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் வகுப்புகள் அல்லது கருத்தரங்குகளை நடத்தக்கூடாது.

Advertisement

Advertisement

Advertisement