சந்தையில் உள்ள அரிசி மாஃப்பியாவை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், சந்தையில் பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் பச்சை அரிசியை இறக்குமதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த அதனை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகையால் சந்தைக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.
இந்தநிலையில், சந்தையில் உள்ள அரிசி மாஃப்பியாவை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரிசி மாஃப்பியாவை முறியடிப்பதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சர் உறுதி சந்தையில் உள்ள அரிசி மாஃப்பியாவை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், சந்தையில் பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் பச்சை அரிசியை இறக்குமதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த அதனை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சந்தைக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது. இந்தநிலையில், சந்தையில் உள்ள அரிசி மாஃப்பியாவை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.