• Nov 23 2024

அதானி குழுமத்தின் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகள் மீள் பரிசீலனை!

Chithra / Oct 14th 2024, 1:08 pm
image


மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் பலர் சமர்ப்பித்தனர்.

இந்த மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போது, ​​அமைச்சரவை செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, இந்த மாதம் 7 ஆம் திகதி உத்தேச காற்றாலை மின் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களில் உள்ளவற்றை கருத்தில் கொண்டு, உரிய திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து, அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

தற்போதைய இடைக்கால அமைச்சர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் புதிய அமைச்சர்கள் சபையின் தீர்மானத்தை அறிவிப்பதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அவதானிப்புகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகள் மீள் பரிசீலனை மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த மனுக்களை வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் பலர் சமர்ப்பித்தனர்.இந்த மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போது, ​​அமைச்சரவை செயலாளர் மற்றும் எரிசக்தி அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, இந்த மாதம் 7 ஆம் திகதி உத்தேச காற்றாலை மின் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.இதன்படி, இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் மற்றும் மனுக்களில் உள்ளவற்றை கருத்தில் கொண்டு, உரிய திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்து, அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.தற்போதைய இடைக்கால அமைச்சர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் புதிய அமைச்சர்கள் சபையின் தீர்மானத்தை அறிவிப்பதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அவதானிப்புகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement