142வது ஐ.ஓ.சி அமர்வில் எட்டு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், மேலும் 15 பேரை மீண்டும் தேர்வு செய்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் உறுப்பினர்கள் ஒப்புதலளித்துள்ளனர்.
பாரிஸ் 2024 தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் வரவிருக்கும் அமர்வில், ஐ.ஓ.சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க, எட்டு வேட்பாளர்கள் - (நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள்) நியமனத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பிற்குள் 15 ஐஓசி உறுப்பினர்களை மீண்டும் தேர்வு செய்யவும், ஒரு உறுப்பினரின் பதவிக் காலத்தை நீடிக்கவும், இரண்டு கெளரவ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் அது முன்மொழிந்தது.
மேலும், நான்கு வேட்பாளர்கள், அவர்களில் மூன்று பெண்கள், சுயேச்சையாக முன்மொழியப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்ஜென்டினா ஒலிம்பிக் சாம்பியனான பவுலா "பெக்" பரேட்டோ, எகிப்திய மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆயா மெடானி, நியூசிலாந்து வெள்ளிப் பதக்கம் வென்ற சாரா வாக்கர் மற்றும் புரோகிராம் கமிஷனின் உறுப்பினரான பிரிட்டன் ஹக் ராபர்ட்சன் ஆகியோராவர்.
ஜூலை 23 - 24 மற்றும் ஆகஸ்ட் 10 - 14 ஆகிய திகதிகளில் பரிஸில் கூட்டம் நடைபெறவுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக்கில் புதிய அங்கத்தவர்கள் சேர்ப்பு 142வது ஐ.ஓ.சி அமர்வில் எட்டு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், மேலும் 15 பேரை மீண்டும் தேர்வு செய்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் உறுப்பினர்கள் ஒப்புதலளித்துள்ளனர்.பாரிஸ் 2024 தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் வரவிருக்கும் அமர்வில், ஐ.ஓ.சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க, எட்டு வேட்பாளர்கள் - (நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள்) நியமனத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பிற்குள் 15 ஐஓசி உறுப்பினர்களை மீண்டும் தேர்வு செய்யவும், ஒரு உறுப்பினரின் பதவிக் காலத்தை நீடிக்கவும், இரண்டு கெளரவ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் அது முன்மொழிந்தது.மேலும், நான்கு வேட்பாளர்கள், அவர்களில் மூன்று பெண்கள், சுயேச்சையாக முன்மொழியப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்ஜென்டினா ஒலிம்பிக் சாம்பியனான பவுலா "பெக்" பரேட்டோ, எகிப்திய மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆயா மெடானி, நியூசிலாந்து வெள்ளிப் பதக்கம் வென்ற சாரா வாக்கர் மற்றும் புரோகிராம் கமிஷனின் உறுப்பினரான பிரிட்டன் ஹக் ராபர்ட்சன் ஆகியோராவர்.ஜூலை 23 - 24 மற்றும் ஆகஸ்ட் 10 - 14 ஆகிய திகதிகளில் பரிஸில் கூட்டம் நடைபெறவுள்ளது.