• Nov 24 2024

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை..! ஜனாதிபதி ரணில் உறுதி

Chithra / Mar 3rd 2024, 10:25 am
image

 

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவின் அழைப்பையேற்று நேற்று(02) தம்லகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவின் கலமெடியாவ கிராமத்தின் நெல் அறுவடையைக் கண்காணிக்கச் சென்றிருந்த வேளையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

தம்பலகமுவ பிரதேச செயலகப் பிரிவின் 9000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெரும்போகத்தின் போது கலமெட்டியாவ கிராம சேவகர் பிரிவில், மாத்திரம் 672 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையுடன் கட்சி, நிற பேதமின்றி அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர். 

அந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை. ஜனாதிபதி ரணில் உறுதி  நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவின் அழைப்பையேற்று நேற்று(02) தம்லகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவின் கலமெடியாவ கிராமத்தின் நெல் அறுவடையைக் கண்காணிக்கச் சென்றிருந்த வேளையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.தம்பலகமுவ பிரதேச செயலகப் பிரிவின் 9000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பெரும்போகத்தின் போது கலமெட்டியாவ கிராம சேவகர் பிரிவில், மாத்திரம் 672 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் வருகையுடன் கட்சி, நிற பேதமின்றி அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர். அந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு உரிய அதிகாரிகளை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement