• Sep 08 2024

கடலட்டை பண்ணையால் பாதிப்பு- தீவக மீனவர்களால் பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிப்பு...!

Sharmi / Jul 15th 2024, 4:22 pm
image

Advertisement

கடலட்டை பண்ணையால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தீவக மீனவர்களால் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளருக்கு  மகஜர் கையளிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக வேலணை அம்பிகை நகர் கடற்றொழிலாளர் சங்கம்,  மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம், தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கம்,  சின்னமடு கடற்றொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்கள் சட்ட விரோதமாக மெலிஞ்சிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கடலட்டை பண்ணைகளால் தமக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாக மேற்படி கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளருக்கு இன்றைய தினம்(15) மகஜர் ஒன்றை வழங்கியதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இதனால் தனது வாழ்வாதார தொழில்  அழிக்கப்படுவதாகவும் கடற்றொழிலுக்கு செல்லும் பாதைகள் கடல் அட்டை பண்ணையால் மறைத்து அடைக்கப்படுவதாலும் சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்கள்தான் பாதிப்படைகின்றோம். இதனால் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிப்படைகின்றது.

எனவே இந்த கடல் அட்டை பண்ணையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.




கடலட்டை பண்ணையால் பாதிப்பு- தீவக மீனவர்களால் பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிப்பு. கடலட்டை பண்ணையால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தீவக மீனவர்களால் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளருக்கு  மகஜர் கையளிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பாக வேலணை அம்பிகை நகர் கடற்றொழிலாளர் சங்கம்,  மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம், தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கம்,  சின்னமடு கடற்றொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்கள் சட்ட விரோதமாக மெலிஞ்சிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கடலட்டை பண்ணைகளால் தமக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாக மேற்படி கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளருக்கு இன்றைய தினம்(15) மகஜர் ஒன்றை வழங்கியதாகவும் கருத்து தெரிவித்தனர்.இதனால் தனது வாழ்வாதார தொழில்  அழிக்கப்படுவதாகவும் கடற்றொழிலுக்கு செல்லும் பாதைகள் கடல் அட்டை பண்ணையால் மறைத்து அடைக்கப்படுவதாலும் சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்கள்தான் பாதிப்படைகின்றோம். இதனால் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிப்படைகின்றது. எனவே இந்த கடல் அட்டை பண்ணையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement