• Jan 19 2025

இறுதி போட்டியில் திடீரென முடிவை மாற்றிய ஆப்கானிஸ்தான் அணி..!!

Tamil nila / Feb 21st 2024, 7:12 pm
image

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (21) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தம்புள்ளை - ரங்கிரிய மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சையே தெரிவு செய்திருந்தது.

எனினும் இன்றைய இறுதி போட்டியில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் தொடரை இலங்கை அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இறுதி போட்டியில் திடீரென முடிவை மாற்றிய ஆப்கானிஸ்தான் அணி. சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (21) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.தம்புள்ளை - ரங்கிரிய மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.முதல் இரண்டு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சையே தெரிவு செய்திருந்தது.எனினும் இன்றைய இறுதி போட்டியில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் தொடரை இலங்கை அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement