• Mar 10 2025

மின் கட்டணத்தை அதிகரித்து மறைமுக வரியை அறிவிட திட்டமிடும் அரசு - அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

Chithra / Mar 9th 2025, 8:55 am
image

 

அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கு திட்டமிடுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமும் தண்டப்பணம் அறவிடுவதற்கும், மறைமுக வரியை அறிவிடுவதற்கும் திட்டமிடுகிறது.

நாணய நிதியத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. 

இதற்கு முன்னர் பொது மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மின்கட்டணத்தை குறைக்க முடிந்தது.

எனவே மீண்டும் நியாயமற்ற முறையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால், நாம் சட்டரீதியாக அது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி அந்த முயற்சியை தோற்கடிப்போம்.

மேலும் இன்று நாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை வெட்கத்துக்குரிய விடயமாகும். 

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் பொலிஸ்மா அதிபர் இருக்குமிடத்தையும், கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடத்தையும் நாம் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார். அவர்களை நாம் கைது செய்வோம் என்றும் அவர் கூறினார். 

சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கும் இடம் தெரிந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். 

அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை எனில் அவர்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது  என்பதை காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரித்து மறைமுக வரியை அறிவிட திட்டமிடும் அரசு - அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு  அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கு திட்டமிடுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமும் தண்டப்பணம் அறவிடுவதற்கும், மறைமுக வரியை அறிவிடுவதற்கும் திட்டமிடுகிறது.நாணய நிதியத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு முன்னர் பொது மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மின்கட்டணத்தை குறைக்க முடிந்தது.எனவே மீண்டும் நியாயமற்ற முறையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால், நாம் சட்டரீதியாக அது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி அந்த முயற்சியை தோற்கடிப்போம்.மேலும் இன்று நாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை வெட்கத்துக்குரிய விடயமாகும். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, முன்னாள் பொலிஸ்மா அதிபர் இருக்குமிடத்தையும், கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடத்தையும் நாம் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார். அவர்களை நாம் கைது செய்வோம் என்றும் அவர் கூறினார். சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கும் இடம் தெரிந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை எனில் அவர்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது  என்பதை காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement