• Nov 17 2024

அனைவரும் ஒற்றுமையாக வீட்டுச்சின்னத்துக்கு மட்டும் வாக்களியுங்கள் - திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம்

Tharmini / Nov 11th 2024, 9:35 am
image

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறையும் வீட்டுச்சின்னத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் நான்கு கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது.

உணர்வுள்ள தமிழர்கள் திருகோணமலை மண்ணின் இருப்பை தக்க வைக்க அனைவரும் ஒற்றுமையாக வீட்டுச்சின்னத்துக்கு மட்டும் வாக்களியுங்கள் என திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது.

நாடாளுமன்றத் தேர்தல் - 2024 திருகோணமலை மாவட்டம். 

வடக்கு கிழக்கின் தலைநகராம் திருகோணமலையில் நான்கு தமிழ் தேசியக் கட்சிகள்  ஒன்றிணைந்து பொதுச்சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டி இடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எமது தமிழ்தேசியத்தின் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் இல்லாதொழிக்க  நன்கு திட்டமிடப்பட்டு 14 சுசேட்சை குழுக்களும், 17  கட்சிகளும் போட்டி இடுகின்றன.

தமிழ் மக்களின் வாக்குச்  சிதறலால் ஓர் இரு ஆயிரங்களால் எமது தலைநகரப் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம்.

எனவே, ஒரு சில நூறு வாக்குகளை மட்டும் பெறப்போகும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சுயேட்சைக் குழுக்களுக்கும், கட்சிகளுக்கும்  வாக்களித்து   உங்கள் வாக்கை வீணாக்காமல் நான்கு கட்சிகளின் ஒன்றிணைவான வீட்டுச் சின்னத்திற்கு  வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

ஏன் எனில் இதுவல்ல தருணம்.திருகோணமலை தமிழ்மக்கள் தமக்குள் பல கோணங்களாய்ப் பிரிந்து கிடப்பதற்கு கடந்த கால அரசியலில் பல குறைபாடுகள் உண்டுதான் மறுக்கமுடியாது.

குற்றங்களும், குளறுபடிகளும் நிறைந்துதான் கிடந்தன மறக்கக்கூடாது. ஆனாலும் எங்கள் தவிர்க்கமுடியாத கடமை, இந்த தேர்தலில் எமது தொலைநோக்கிற்கான பலத்தைப்பெறவேண்டும்.

முப்புரிக் கயிறாய் முறுகித் திரண்டு தேர் இழுத்த எங்களை இன்று ஓற்றைப்புரியாய் ஒடுங்கிப் போகச் செய்தவர்கள் நாணிக்கோண, மீண்டும் தேர் வடமாய் திரளுவோம். துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஊடாக மீள் அவதாரம் எடுக்கவிருக்கும் 

திருகோணமலை மீதான சனநாயக உரிமையினை நாங்கள் ஒன்றாக தக்கவைப்போம்.

கட்சியின் மீது வெறுப்பிருக்கலாம், கோபம் இருக்கலாம் - ஆனால் இதுவல்ல தருணம் கட்சிக்கு பாடம் கற்பிப்பதாக எண்ணி திருகோணமலைத் 

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் போட்டுடைப்பதற்கு, - முதலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை ஒன்றாய்ப் பாதுகாப்போம்.

நீங்கள் வாக்களிக்கப்போகும் வீட்டுச்சின்னமும், தமிழரசுக்கட்சியும் இந்த தேர்தல் எனும் ஆற்றினை நாம் ஒன்றாய்க் கடக்க உதவும் தெப்பம் மட்டுமே – எனவே, 

இந்தப் பாராளுமன்றத் தேர்;தலில் நாங்கள் ஒன்றாய்த் திரண்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போம். தமிழன் திருகோணமலையில் விழவில்லை என்பதனை உலகம் வியப்புறும் வண்ணம் பிரகடனம் செய்வோம்.

இதுவே கடைசித் தருணம். கடைசி ஒற்றைப் புரியில் தொங்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தையும், இருப்பினையும் திருகோணமலையில் மீட்டெடுப்பதற்கு.எங்கள் அலட்சியமும், அக்கறையீனமும் நாங்கள் 

அடைந்த அவமானமும், பெற்ற அடியும், அவதூறுகளும் எல்லாவற்றினதும் விலையாக எங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கமுடியாது.

எமது எதிர்காலம், எமது பிள்ளைகளின் எதிர்காலம், எமது ஆயிரம் தலைமுறையின் எதிர்காலம் -அது இந்தக் கணத்தில் எங்கள் கைகளிலேயே வாக்குச்சீட்டுக்களாய், 

எதிர்கால தலைமுறைக்கு நாமளிக்கும் வாக்குறுதிகளாய்: “உங்களுக்காய் ஒன்றாய் திரளுகின்றோம் - இந்தக் கணத்திலே தமிழர் பிரதிநிதித்துவத்தை திருகோணமலையில் 

மீட்டெடுத்து உங்களிடம் தருகின்றோம் - எதிர்காலத்தை நிலைநிறுத்தி தலைமைத்துவத்தைச் செம்மைப்படுத்தியும் உருக்கியும் வார்ப்பதற்காய். ”தாய் மண், எங்கள் தமிழ் மண், வந்தாரையும் வாழவைக்கும் பெருமைபெறு திருமலை. எங்கள் சந்ததிகள் ஆயிரமாய், ஆலமர விழுதுகளாய், வீரத்தின் விளை நிலமாய்,

அன்பெனும் அறத்தின் சான்றுகளாய், அகிலமும் ஆளும் ஆளுமைகளாய்  எங்கள் தலைமுறை திருமலையில் நிலைபெற வாக்களிப்போம் வீட்டிற்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவரும் ஒற்றுமையாக வீட்டுச்சின்னத்துக்கு மட்டும் வாக்களியுங்கள் - திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறையும் வீட்டுச்சின்னத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் நான்கு கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது.உணர்வுள்ள தமிழர்கள் திருகோணமலை மண்ணின் இருப்பை தக்க வைக்க அனைவரும் ஒற்றுமையாக வீட்டுச்சின்னத்துக்கு மட்டும் வாக்களியுங்கள் என திருகோணமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது.நாடாளுமன்றத் தேர்தல் - 2024 திருகோணமலை மாவட்டம். வடக்கு கிழக்கின் தலைநகராம் திருகோணமலையில் நான்கு தமிழ் தேசியக் கட்சிகள்  ஒன்றிணைந்து பொதுச்சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டி இடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.எமது தமிழ்தேசியத்தின் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் இல்லாதொழிக்க  நன்கு திட்டமிடப்பட்டு 14 சுசேட்சை குழுக்களும், 17  கட்சிகளும் போட்டி இடுகின்றன.தமிழ் மக்களின் வாக்குச்  சிதறலால் ஓர் இரு ஆயிரங்களால் எமது தலைநகரப் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம். எனவே, ஒரு சில நூறு வாக்குகளை மட்டும் பெறப்போகும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சுயேட்சைக் குழுக்களுக்கும், கட்சிகளுக்கும்  வாக்களித்து   உங்கள் வாக்கை வீணாக்காமல் நான்கு கட்சிகளின் ஒன்றிணைவான வீட்டுச் சின்னத்திற்கு  வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.ஏன் எனில் இதுவல்ல தருணம்.திருகோணமலை தமிழ்மக்கள் தமக்குள் பல கோணங்களாய்ப் பிரிந்து கிடப்பதற்கு கடந்த கால அரசியலில் பல குறைபாடுகள் உண்டுதான் மறுக்கமுடியாது.குற்றங்களும், குளறுபடிகளும் நிறைந்துதான் கிடந்தன மறக்கக்கூடாது. ஆனாலும் எங்கள் தவிர்க்கமுடியாத கடமை, இந்த தேர்தலில் எமது தொலைநோக்கிற்கான பலத்தைப்பெறவேண்டும். முப்புரிக் கயிறாய் முறுகித் திரண்டு தேர் இழுத்த எங்களை இன்று ஓற்றைப்புரியாய் ஒடுங்கிப் போகச் செய்தவர்கள் நாணிக்கோண, மீண்டும் தேர் வடமாய் திரளுவோம். துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஊடாக மீள் அவதாரம் எடுக்கவிருக்கும் திருகோணமலை மீதான சனநாயக உரிமையினை நாங்கள் ஒன்றாக தக்கவைப்போம்.கட்சியின் மீது வெறுப்பிருக்கலாம், கோபம் இருக்கலாம் - ஆனால் இதுவல்ல தருணம் கட்சிக்கு பாடம் கற்பிப்பதாக எண்ணி திருகோணமலைத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் போட்டுடைப்பதற்கு, - முதலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை ஒன்றாய்ப் பாதுகாப்போம்.நீங்கள் வாக்களிக்கப்போகும் வீட்டுச்சின்னமும், தமிழரசுக்கட்சியும் இந்த தேர்தல் எனும் ஆற்றினை நாம் ஒன்றாய்க் கடக்க உதவும் தெப்பம் மட்டுமே – எனவே, இந்தப் பாராளுமன்றத் தேர்;தலில் நாங்கள் ஒன்றாய்த் திரண்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போம். தமிழன் திருகோணமலையில் விழவில்லை என்பதனை உலகம் வியப்புறும் வண்ணம் பிரகடனம் செய்வோம்.இதுவே கடைசித் தருணம். கடைசி ஒற்றைப் புரியில் தொங்கும் தமிழர் பிரதிநிதித்துவத்தையும், இருப்பினையும் திருகோணமலையில் மீட்டெடுப்பதற்கு.எங்கள் அலட்சியமும், அக்கறையீனமும் நாங்கள் அடைந்த அவமானமும், பெற்ற அடியும், அவதூறுகளும் எல்லாவற்றினதும் விலையாக எங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கமுடியாது.எமது எதிர்காலம், எமது பிள்ளைகளின் எதிர்காலம், எமது ஆயிரம் தலைமுறையின் எதிர்காலம் -அது இந்தக் கணத்தில் எங்கள் கைகளிலேயே வாக்குச்சீட்டுக்களாய், எதிர்கால தலைமுறைக்கு நாமளிக்கும் வாக்குறுதிகளாய்: “உங்களுக்காய் ஒன்றாய் திரளுகின்றோம் - இந்தக் கணத்திலே தமிழர் பிரதிநிதித்துவத்தை திருகோணமலையில் மீட்டெடுத்து உங்களிடம் தருகின்றோம் - எதிர்காலத்தை நிலைநிறுத்தி தலைமைத்துவத்தைச் செம்மைப்படுத்தியும் உருக்கியும் வார்ப்பதற்காய். ”தாய் மண், எங்கள் தமிழ் மண், வந்தாரையும் வாழவைக்கும் பெருமைபெறு திருமலை. எங்கள் சந்ததிகள் ஆயிரமாய், ஆலமர விழுதுகளாய், வீரத்தின் விளை நிலமாய்,அன்பெனும் அறத்தின் சான்றுகளாய், அகிலமும் ஆளும் ஆளுமைகளாய்  எங்கள் தலைமுறை திருமலையில் நிலைபெற வாக்களிப்போம் வீட்டிற்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement