• May 17 2024

ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இடம்பெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!samugammedia

Sharmi / Jul 12th 2023, 11:58 am
image

Advertisement

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள். சமூக அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு காத்திரமான தீர்வுக்கள் எட்டப்பட்டன.

அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் ஆராய்ந்து நிரந்தரமான தீர்வு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துதல், வெள்ள அனர்த்ங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிமுறைகள் இனங் காணப்படுவதுடன், ஆறுகள் வடிகால்கள் முறையாக பராமரிக்கபடுவதற்கு தேவையான முன்மொழிவுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் முன்வைக்கவேண்டுமென இணைப்புக் குழு தலைவர் கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்றில் அரச அலுவலகங்களுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுவதாக திணைக்களத் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

விவசாயக் காணிகளிலிருந்து அதி உச்சப்பயனை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன் வேளான்மை செய்வது தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விவசாய வீதிகளினை புணரமைத்தல், நீர்ப்பாசன மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்ற மக்களின் அத்தியவசிய தேவைகளை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாகவும் கலந்து கொண்ட திணைக்களத் தலைவர்களினால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது.




ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இடம்பெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.samugammedia அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள். சமூக அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு காத்திரமான தீர்வுக்கள் எட்டப்பட்டன. அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் ஆராய்ந்து நிரந்தரமான தீர்வு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துதல், வெள்ள அனர்த்ங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிமுறைகள் இனங் காணப்படுவதுடன், ஆறுகள் வடிகால்கள் முறையாக பராமரிக்கபடுவதற்கு தேவையான முன்மொழிவுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் முன்வைக்கவேண்டுமென இணைப்புக் குழு தலைவர் கேட்டுக்கொண்டார். அக்கரைப்பற்றில் அரச அலுவலகங்களுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுவதாக திணைக்களத் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். விவசாயக் காணிகளிலிருந்து அதி உச்சப்பயனை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன் வேளான்மை செய்வது தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விவசாய வீதிகளினை புணரமைத்தல், நீர்ப்பாசன மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்ற மக்களின் அத்தியவசிய தேவைகளை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாகவும் கலந்து கொண்ட திணைக்களத் தலைவர்களினால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement