• May 17 2024

மன்னார் வர்த்தகர்களுக்கு போதிய அறிவில்லை - பாவனையாளர் அபிவிருத்தி அதிகாரசபை விளக்கம்! samugammedia

Chithra / Jul 12th 2023, 12:00 pm
image

Advertisement

மன்னார் பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊழல் மற்றும் லஞ்ச செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு இவ்வாரம் மன்னார் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபை தொடர்பிலான செய்தி ஒன்றை வெளியிடப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மன்னார் பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரிடம் குறித்த செய்தி தொடர்பில் விளக்கம் கோரியிருந்தார். 

இந்த நிலையில் மன்னார் பாவனையாளர் அபிவிருத்தி அதிகாரசபையினர் வழங்கிய விளக்கத்தின் பிரகாரம் தாங்கள் மிகவும் சிறப்பாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நடப்பதாகவும் தங்களது தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் target அதிகமாக இருப்பதனாலே குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாபர நிலைய உரிமையாளர்கள் தமது அலுவலகங்களுக்கு வருகை தந்து வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறும் ,சான்று பொருட்களை விடுவிக்குமாறும் கோருவதாகவும் வழக்கு பெயர்கள் திகதிகளை மாற்றி தருமாறு கேட்பதாகவும் தாங்கள் நேர்மையாக இருப்பதன் காரணமாக அதை மறுப்பதால் வர்த்தகர்கள் தங்கள் மீது திட்டமிட்டு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

அதே நேரம் மன்னார் மாவட்ட வர்த்தகர்களுக்கு மன்னார் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை சட்டநடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக போதிய அறிவில்லை எனவும் சுட்டி காட்டியுள்ளனர்.

எனவே அது தொடர்பில் தங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் உண்மையில் பாதிப்படைந்த அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு நேரடியாகவோ எழுத்து மூலமாகவோ தகவல் வழங்குமாறும் அவ்வாறு உண்மையான தகவல் வழங்கும் பட்சத்தில் உரிய விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியப்படுத்தியுள்ளார்.


மன்னார் வர்த்தகர்களுக்கு போதிய அறிவில்லை - பாவனையாளர் அபிவிருத்தி அதிகாரசபை விளக்கம் samugammedia மன்னார் பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊழல் மற்றும் லஞ்ச செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு இவ்வாரம் மன்னார் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபை தொடர்பிலான செய்தி ஒன்றை வெளியிடப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மன்னார் பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரிடம் குறித்த செய்தி தொடர்பில் விளக்கம் கோரியிருந்தார். இந்த நிலையில் மன்னார் பாவனையாளர் அபிவிருத்தி அதிகாரசபையினர் வழங்கிய விளக்கத்தின் பிரகாரம் தாங்கள் மிகவும் சிறப்பாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நடப்பதாகவும் தங்களது தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் target அதிகமாக இருப்பதனாலே குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.வியாபர நிலைய உரிமையாளர்கள் தமது அலுவலகங்களுக்கு வருகை தந்து வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறும் ,சான்று பொருட்களை விடுவிக்குமாறும் கோருவதாகவும் வழக்கு பெயர்கள் திகதிகளை மாற்றி தருமாறு கேட்பதாகவும் தாங்கள் நேர்மையாக இருப்பதன் காரணமாக அதை மறுப்பதால் வர்த்தகர்கள் தங்கள் மீது திட்டமிட்டு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்அதே நேரம் மன்னார் மாவட்ட வர்த்தகர்களுக்கு மன்னார் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை சட்டநடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக போதிய அறிவில்லை எனவும் சுட்டி காட்டியுள்ளனர்.எனவே அது தொடர்பில் தங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் உண்மையில் பாதிப்படைந்த அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு நேரடியாகவோ எழுத்து மூலமாகவோ தகவல் வழங்குமாறும் அவ்வாறு உண்மையான தகவல் வழங்கும் பட்சத்தில் உரிய விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement