• May 21 2024

ஒன்றிணைந்த கல்குடாத்தொகுதி வர்த்தகர்கள்: வாராந்த சந்தைகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கடையடைப்பு

Chithra / Aug 21st 2023, 9:13 pm
image

Advertisement

கல்குடாத்தொகுதி வர்த்தகர்கள் ஒன்றிணைந்து தமது பிரதேசத்தில் நடாத்தப்படும் வாராந்த சந்தைகளை இடைநிறுத்துமாறு கோரி  கடைகளை அடைத்து எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பேரணியில் கலந்து கொண்டனர். 

கல்குடாத்தொகுதியில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தமது பிரதேசத்தில் வாராந்த சந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி  கடையடைப்புச் செய்ததுடன், பேரணியாகச் சென்று வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் ஆகியோரிடத்தில் தங்களது மகஜர்களைக் கையளித்தனர்.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைகளுக்குள் வாராந்த சந்தைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் தங்களது வர்த்தக நிலையங்களுக்கு வருமானம் குறைந்து காணப்படுவதாகவும், நாங்களே பிரதேச சபைக்கு வருமானத்தை ஈட்டித்தருவதோடு பிரதேசத்தின் அனைத்து விடயங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிகள் செய்து வருகின்றோம்.

அத்தோடு, எங்களது வர்த்தக நிலையங்களுக்கு சுகாதாரத் தரப்பினர், விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எல்லோரும் முறையாக வந்து பரிசோதனைகள் செய்கின்றனர். 

ஆனால், வாராந்த சந்தைகளில் தரமற்ற பொருட்களை விற்று விட்டுச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் முறையாக அனுமதிப்பத்திரம் பெற்று வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிப்படையாத வகையிலும் உடனடியாக பிரதேச சபைகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வாராந்த சந்தைகளை நிறுத்துமாறு அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஏ.றபீக் தலைமையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பௌத்த, இஸ்லாமிய மதத்தலைவர்களும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த தமிழ், முஸ்லீம் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பொதுச்சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப்பேரணி வாழைச்சேனை பிரதேச சபைக்குச் சென்று பிரதே சபைச் செயலாளர் எஸ்.நவனீதன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் ஆகியோருக்கு மகஜர்களைக் கையளித்ததுடன், அங்கிருந்து பாசிக்குடா- கொழும்பு பிரதான வீதி வழியாகச் சென்று ஓட்டமாவடி பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடமும் மகஜரினைக் கையளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

மகஜர்களைப் பெற்றுக்கொண்ட வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர்களும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரும் தங்களது மேலதிகாரிகளுக்கு இன்மகஜர்களை உடன் அனுப்பி வைப்பதுடன், இதற்கான தீர்வினையும் பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தனர்.


ஒன்றிணைந்த கல்குடாத்தொகுதி வர்த்தகர்கள்: வாராந்த சந்தைகளால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கடையடைப்பு கல்குடாத்தொகுதி வர்த்தகர்கள் ஒன்றிணைந்து தமது பிரதேசத்தில் நடாத்தப்படும் வாராந்த சந்தைகளை இடைநிறுத்துமாறு கோரி  கடைகளை அடைத்து எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பேரணியில் கலந்து கொண்டனர். கல்குடாத்தொகுதியில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தமது பிரதேசத்தில் வாராந்த சந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி  கடையடைப்புச் செய்ததுடன், பேரணியாகச் சென்று வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் ஆகியோரிடத்தில் தங்களது மகஜர்களைக் கையளித்தனர்.வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைகளுக்குள் வாராந்த சந்தைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் தங்களது வர்த்தக நிலையங்களுக்கு வருமானம் குறைந்து காணப்படுவதாகவும், நாங்களே பிரதேச சபைக்கு வருமானத்தை ஈட்டித்தருவதோடு பிரதேசத்தின் அனைத்து விடயங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிகள் செய்து வருகின்றோம்.அத்தோடு, எங்களது வர்த்தக நிலையங்களுக்கு சுகாதாரத் தரப்பினர், விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எல்லோரும் முறையாக வந்து பரிசோதனைகள் செய்கின்றனர். ஆனால், வாராந்த சந்தைகளில் தரமற்ற பொருட்களை விற்று விட்டுச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் முறையாக அனுமதிப்பத்திரம் பெற்று வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிப்படையாத வகையிலும் உடனடியாக பிரதேச சபைகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வாராந்த சந்தைகளை நிறுத்துமாறு அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாழைச்சேனை வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஏ.றபீக் தலைமையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பௌத்த, இஸ்லாமிய மதத்தலைவர்களும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த தமிழ், முஸ்லீம் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.வாழைச்சேனை பொதுச்சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப்பேரணி வாழைச்சேனை பிரதேச சபைக்குச் சென்று பிரதே சபைச் செயலாளர் எஸ்.நவனீதன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் ஆகியோருக்கு மகஜர்களைக் கையளித்ததுடன், அங்கிருந்து பாசிக்குடா- கொழும்பு பிரதான வீதி வழியாகச் சென்று ஓட்டமாவடி பிரதேச சபைச்செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடமும் மகஜரினைக் கையளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.மகஜர்களைப் பெற்றுக்கொண்ட வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர்களும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரும் தங்களது மேலதிகாரிகளுக்கு இன்மகஜர்களை உடன் அனுப்பி வைப்பதுடன், இதற்கான தீர்வினையும் பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement