• May 17 2024

கொட்டும் மழைக்கு மத்தியில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு...! அணிதிரண்ட மக்கள்...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 4:36 pm
image

Advertisement

கொட்டும் மழையில் மலையக பகுதிகளில் அதிக மதுபானசாலைகள் அமைப்பதை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து, மலையக மக்கள் முன்னணியினர் இன்று(18) குயில்வத்தையில் உள்ள செஸ்டா உணவக பகுதியில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஸ்ணன் ஆலோசனைக்கமைய அக்கட்சியினர் இன்று மதியம் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இப் போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவியும் ,முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தலைமையில் போராட்டம் குயில்வத்தையில் முன்னெடுக்கப்பட்டது.

இப்பகுதி பாடசாலை, ஆலயம் மற்றும் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் மதுபானசாலையை திறக்கப்படும் பட்சத்தில் அங்கு தற்போது உள்ள அனைத்து அமைதியும் பறிபோய் விடும்.

எனவே இப்பகுதியில் மதுபானசாலையை முன்னெடுக்க விடமாட்டோம். இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவி சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கொட்டும் மழைக்கு மத்தியில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு. அணிதிரண்ட மக்கள்.samugammedia கொட்டும் மழையில் மலையக பகுதிகளில் அதிக மதுபானசாலைகள் அமைப்பதை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து, மலையக மக்கள் முன்னணியினர் இன்று(18) குயில்வத்தையில் உள்ள செஸ்டா உணவக பகுதியில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஸ்ணன் ஆலோசனைக்கமைய அக்கட்சியினர் இன்று மதியம் போராட்டத்தில் குதித்திருந்தனர்.இப் போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவியும் ,முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தலைமையில் போராட்டம் குயில்வத்தையில் முன்னெடுக்கப்பட்டது.இப்பகுதி பாடசாலை, ஆலயம் மற்றும் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் மதுபானசாலையை திறக்கப்படும் பட்சத்தில் அங்கு தற்போது உள்ள அனைத்து அமைதியும் பறிபோய் விடும். எனவே இப்பகுதியில் மதுபானசாலையை முன்னெடுக்க விடமாட்டோம். இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவி சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement