• Mar 03 2025

அரச வங்கிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த அம்பிட்டிய தேரர்; பணம் கொள்ளையிடப்பட்டதாக குற்றச்சாட்டு

Chithra / Mar 2nd 2025, 7:22 am
image


அரசாங்க வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் தம் வங்கியில் வைய்ப்புச் செய்த பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மக்கள் வங்கியை கிளைக்குள் கூச்சலிட்ட தேரர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடுந்தொனியில் திட்டி அவர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்குவதற்கு அம்பிட்டிய சுமனரதன தேரர் முயற்சித்த காணொளி வெளியாகியுள்ளது. 

மேலும் அரச வங்கிகளில் அப்பாவி பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் இவ்வாறு பணம் கொள்ளை இடப்படுவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும்  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வங்கிகளின் பிரதானிகள், வைப்பிலிட்ட பணம் களவாடப்படும் நடவடிக்கைகளை தடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது வங்கி கணக்கில் வைப்புச் செய்த பணம் எவ்வாறு வேறு ஒரு வங்கியின் வைப்பாளரது கணக்கில் வைப்பிலிடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த பிரச்சனைக்கு நாட்டின் மத்திய வங்கிய ஆளுநரும் நிதி அமைச்சரும் பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பணத்தை வழங்கினால் எந்த விதமான பிரச்சினையும் இன்றி தாங்கள் வங்கியை விட்டு செல்ல தயார் என  தேரர் தெரிவித்துள்ளார்.

அரச வங்கிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த அம்பிட்டிய தேரர்; பணம் கொள்ளையிடப்பட்டதாக குற்றச்சாட்டு அரசாங்க வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் தம் வங்கியில் வைய்ப்புச் செய்த பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.மட்டக்களப்பு மக்கள் வங்கியை கிளைக்குள் கூச்சலிட்ட தேரர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடுந்தொனியில் திட்டி அவர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்குவதற்கு அம்பிட்டிய சுமனரதன தேரர் முயற்சித்த காணொளி வெளியாகியுள்ளது. மேலும் அரச வங்கிகளில் அப்பாவி பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும் இவ்வாறு பணம் கொள்ளை இடப்படுவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும்  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.வங்கிகளின் பிரதானிகள், வைப்பிலிட்ட பணம் களவாடப்படும் நடவடிக்கைகளை தடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தனது வங்கி கணக்கில் வைப்புச் செய்த பணம் எவ்வாறு வேறு ஒரு வங்கியின் வைப்பாளரது கணக்கில் வைப்பிலிடப்பட்டது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.இந்த பிரச்சனைக்கு நாட்டின் மத்திய வங்கிய ஆளுநரும் நிதி அமைச்சரும் பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பணத்தை வழங்கினால் எந்த விதமான பிரச்சினையும் இன்றி தாங்கள் வங்கியை விட்டு செல்ல தயார் என  தேரர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement