• Sep 19 2024

சுவிட்சர்லாந்தில், இதுவரை இல்லாத ஒரு அசாதாரண இயற்கை நிகழ்வு - பூமித்தாயின் கோபமா?

Tamil nila / Jan 7th 2023, 5:23 pm
image

Advertisement

நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை கவனித்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமா என்று தெரியாது. அப்படி ஒரு அசாதாரண நிலை சுவிட்சர்லாந்து உட்பட்ட சில நாடுகளில் ஏற்பட்டுள்ளது.


இனி வெறும் திரைப்படங்களில் மட்டும்தான் பனியைப் பார்க்கமுடியுமா?

சுவிட்சர்லாந்து என்றாலே, பனியில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளைத்தான் சினிமாக்களில் அதிகம் பார்க்கமுடியும்.


ஆனால், அந்த நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.


ஆம், இந்த ஆண்டு போதுமான அளவில் பனிப்பொழிவு இல்லாததால், சுற்றுலாப்பயணிகளுக்கும் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.


உயரமான மலைச்சிகரங்கள் கூட பனி இல்லாமல் வெறும் பாறைகளாக காட்சியளிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.



நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் கூட்டங்களில் அதைக் குறித்து பேசுவதோடு சரி. பருவநிலை ஆர்வலர்கள் அலட்சியத்துடன் நடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.


திடீரென குளிரடிக்கிறது, அடுத்த வாரமே வெப்பம் அதிகரிக்கிறது. பல நாடுகளில் இந்த நிலை காணப்படுகிறது. இந்தச் சூழல்தான் பனிக்கு எதிரி என்கிறார்கள். பனிப் பொழிகிறது, அடுத்து வரும் வெப்பநிலை உயர்வால், உருவான பனி உருகிப்போகிறது. அப்புறம், பனிச்சறுக்கு விளையாட பனிக்கு எங்கே போவது?



பருவநிலை ஆர்வலர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவு, தற்போது, நாடுகளின் வருவாயை பாதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. ஆம், சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விலையாட பனியே இல்லை என்றால், சுற்றுலாப்பயணிகள் ஏன் அங்கு வரப்போகிறார்கள்!  

சுவிட்சர்லாந்தில், இதுவரை இல்லாத ஒரு அசாதாரண இயற்கை நிகழ்வு - பூமித்தாயின் கோபமா நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை கவனித்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமா என்று தெரியாது. அப்படி ஒரு அசாதாரண நிலை சுவிட்சர்லாந்து உட்பட்ட சில நாடுகளில் ஏற்பட்டுள்ளது.இனி வெறும் திரைப்படங்களில் மட்டும்தான் பனியைப் பார்க்கமுடியுமாசுவிட்சர்லாந்து என்றாலே, பனியில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளைத்தான் சினிமாக்களில் அதிகம் பார்க்கமுடியும்.ஆனால், அந்த நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.ஆம், இந்த ஆண்டு போதுமான அளவில் பனிப்பொழிவு இல்லாததால், சுற்றுலாப்பயணிகளுக்கும் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.உயரமான மலைச்சிகரங்கள் கூட பனி இல்லாமல் வெறும் பாறைகளாக காட்சியளிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் கூட்டங்களில் அதைக் குறித்து பேசுவதோடு சரி. பருவநிலை ஆர்வலர்கள் அலட்சியத்துடன் நடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.திடீரென குளிரடிக்கிறது, அடுத்த வாரமே வெப்பம் அதிகரிக்கிறது. பல நாடுகளில் இந்த நிலை காணப்படுகிறது. இந்தச் சூழல்தான் பனிக்கு எதிரி என்கிறார்கள். பனிப் பொழிகிறது, அடுத்து வரும் வெப்பநிலை உயர்வால், உருவான பனி உருகிப்போகிறது. அப்புறம், பனிச்சறுக்கு விளையாட பனிக்கு எங்கே போவதுபருவநிலை ஆர்வலர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவு, தற்போது, நாடுகளின் வருவாயை பாதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. ஆம், சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விலையாட பனியே இல்லை என்றால், சுற்றுலாப்பயணிகள் ஏன் அங்கு வரப்போகிறார்கள்  

Advertisement

Advertisement

Advertisement