• May 02 2024

வெடுக்குநாறிமலையில் நாளை அதிகாலை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு...!samugammedia

Sharmi / May 9th 2023, 9:01 pm
image

Advertisement

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சங்காபிஷேக நிகழ்வு நாளை(10) அதிகாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.



இந்த சங்காபிஷேக நிகழ்வுக்கான சகல பொருட்களையும் வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் வண்டனில் வசிக்கும் உறவுகளின் நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சங்காபிஷேக நிகழ்வுக்கு  தமிழராய் ஒன்றுபட்டு பங்கேற்று எமது நிலத்தினையும் எமது அடையாளங்களையும் பேணிப்பாதுகாத்து ஆதித் தமிழன் என்றுரைப்போம் என முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர். வ.பார்த்தீபன் சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில்  காணப்பட்ட விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களால் கடந்த மாத முற்பகுதியில் சேதமாக்கப்பட்டும் களவாடப்பட்டும் இருந்த நிலையில் சைவ அமைப்புக்களின் முயற்சியினால் மீண்டும் அதேஇடத்தில் விக்கிரகங்கள் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





வெடுக்குநாறிமலையில் நாளை அதிகாலை இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு.samugammedia வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சங்காபிஷேக நிகழ்வு நாளை(10) அதிகாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.இந்த சங்காபிஷேக நிகழ்வுக்கான சகல பொருட்களையும் வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் வண்டனில் வசிக்கும் உறவுகளின் நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.இதேவேளை குறித்த சங்காபிஷேக நிகழ்வுக்கு  தமிழராய் ஒன்றுபட்டு பங்கேற்று எமது நிலத்தினையும் எமது அடையாளங்களையும் பேணிப்பாதுகாத்து ஆதித் தமிழன் என்றுரைப்போம் என முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர். வ.பார்த்தீபன் சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில்  காணப்பட்ட விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களால் கடந்த மாத முற்பகுதியில் சேதமாக்கப்பட்டும் களவாடப்பட்டும் இருந்த நிலையில் சைவ அமைப்புக்களின் முயற்சியினால் மீண்டும் அதேஇடத்தில் விக்கிரகங்கள் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement