இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரான ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் கல்விஅமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடை பெற்றிருந்தது.
இதனடிப்படையில், இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வை எவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தலாம் என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலையில் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் நிகழ்வு.கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை. இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரான ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் கல்விஅமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடை பெற்றிருந்தது. இதனடிப்படையில், இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வை எவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தலாம் என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.