• Aug 12 2025

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல்

Chithra / Aug 12th 2025, 10:19 am
image

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நேற்று வந்தடைந்தது. 

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 

300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார்.

இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது.


திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல் இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நேற்று வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார்.இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement