இதுவரை 11 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை கன்டுகளித்த பிரேசிலை சேர்ந்த டேனியல் என்ற 75 வயது முதியவர் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை தொடரை பார்க்க ஆரம்பித்தார் டேனியல் ஸ்ப்ரூசி. அப்போது முதல் 11 கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை விடாமல் பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.
கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நாடுகளுக்கு தவறாமல் சென்று போட்டிகளை கண்டுகளித்திருக்கிறார் டேனியல். இடையில் 1982 ஆம் ஆண்டு நடந்த தொடரை மட்டும் இவர் பார்க்கவில்லை. இருப்பினும், அது இவரது கின்னஸ் சாதனைக்கு தடையாக அமையவில்லை.
இதன்மூலம் மிக அதிகமான ஃபிஃபா உலகக்கோப்பை தொடர்களை பார்த்த நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேனியல்.